தென்மேற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மார்ஸ்பை நகரில் இருந்து 443 கி.மீ. வடக்கில் இன்று காலை 6.19 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் கடலுக்குஅடியில் 200 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
