அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உட்கோட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான மானாவாரி நிலப் பகுதியில் சில விவசாயிகள் பாசன வசதி இல்லாததால் தைலமர தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த டலர் மராத்தோப்புகளுக்கு அருகில் சில தனியார் விவசாயிகள் அவர்களது வயல்வெளியில் பயன்படுத்துவதற்காக ஆதுளை கிணறு அமைத்து அதற்கு தமிழக அரசின் இலவச மின்சாரத்தை பெற்றுள்ளனர்.
அந்த இலவச மின்சாரத்திற்கு செல்லும் மின்பாதை தைல மர தோப்பு வழியாக செல்வதால் தைல மரங்கள் மின் கம்பிகளில் உரசி அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
அவ்வப்போது இந்த விபத்தை அருகில் இருந்து கவனிக்கும் விவசாயிகள் உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்து தைலம் மர தோப்பை காப்பாற்றிய சம்பவங்கள் நடந்துள்ளது.
சில நேரங்களில் தீயை அணைக்க முயற்சி செய்தும் முடியாமல் தைலமர தோப்பு முழுமையாக அறிந்த சம்பவங்களும் நடந்துள்ளது. இந்நிலையில் இன்று தைல மர தோப்பு வழியாக செல்லும் மின்பாதையில் தைல
மரங்கள் உரசியதால் மின்கம்பியிலிருந்து தீப்பொறி ஏற்பட்டு அந்தத்தி தைலமர தோப்பில் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.
தூரத்தில் இருந்து விவசாயிகள் தங்கள் வயல்களில் புகைமூட்டம் இழந்துள்ளது பார்த்து பதறி அடித்து ஓடி வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தபோது ஏறத்தாழ 20 ஏக்கர் நிலப்பரப்பில் தைலம் மரக்காடுகள் முற்றிலுமாக எரிந்து நாசம் ஆகிவிட்டது.
இதில் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் செய்வதறியாது மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வேறு பகுதியில் மின் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் எங்களால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வர முடியாது என்று அப்பகுதிக்கு வருவதை தவிர்த்ததாகவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் தைலம் மர தோப்பு முற்றிலுமாக அழிந்து போனது.
இந்த நிலங்கள் உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த தக்ஷிணாமூர்த்தி, பாலச்சந்திரன், கலா, தேவதாஸ், பாலமுருகன் உள்ளிட்ட சில விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலமாகும்.
தைலமரத்தோப்பு உள்ள பகுதி வழியாக மின் பாதை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மின் பாதையை மாற்று பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மருத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் தொடர்ந்து விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.