திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை சேர்ந்த கலாமணி என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். மணப்பாறை வேங்கை குறிச்சி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.