Skip to content

மின் கட்டண உயர்வை கண்டித்து …. பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி எடப்பாடி யார் தலைமையில் அமையும் தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெறுவதை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றச்சாட்டு. பொள்ளாச்சி – ஜூலை-23

தமிழகத்தில் அதிமுக சார்பில் மின்சார கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி குடிநீர் வரி போன்றவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகர சார்பில் திமுக அரசு கண்டித்து முன்னாள் அமைச்சர் சட்டசபை கொறடா கோவை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திமுக அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் பின் எஸ் பி வேலுமணி கூறுகையில் தமிழகத்தில் பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக திமுக அரசு சொத்து வரி குடிநீர் வரி மின் கட்டண உயர்வு போன்றவற்றை தமிழக மக்கள் மீது உயர்த்தி சிரமப்படுகின்றனர் மேலும் தமிழகத்தில் மீண்டும் வரும் 2026 எடப்பாடி யார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் எனவும் தமிழகத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகிறது இது திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை ஆகவே தமிழக மக்கள் 2026 அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்,ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன் , அமுல் கந்தசாமி,அம்மன் அர்ஜுனன்,நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!