Skip to content
Home » மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

மின் கட்டண உயர்வை கண்டித்து… தஞ்சையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

காவிரியில் தண்ணீர் வழங்க மறக்கும் கர்நாடக அரசு, மத்திய அரசு மற்றும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மகளிர் அணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். தஞ்சை மாநகர மாவட்ட கழகப் பொறுப்பாளர் செங்குட்டுவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிப்பது, நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் செயலை கண்டிப்பது, காவிரியை தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு மற்றும் தண்ணீர் பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!