டில்லியில் உள்ள பிசிஏஎஸ் தலைமையகத்தில் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் (பிசிஏஎஸ்)இயக்குனர் சுல்ஃபிகர் ஹசன் நிருபர்களிடம் ஒவ்வொரு நாளும், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுமார் எட்டு லட்சம் கைப்பைகள் மற்றும் ஐந்து லட்சம் செக்-இன் பேக்கேஜ்களை நாங்கள் சோதனை செய்கிறோம். சோதனையின் போது, சுமார் 25 ஆயிரம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டறியப்படுகின்றன. செக்-இன் பேக்கேஜ்களில் பவர் பேங்குகள் (44 சதவீதம்), லைட்டர்கள் (19 சதவீதம்), தளர்வான பேட்டரிகள் (18 சதவீதம்) மற்றும் மடிக்கணினிகள் (11 சதவீதம்) ஆகிய தடை செய்யப்பட்ட பொருட்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைப்பைகளில், லைட்டர்கள் (26 சதவீதம்), கத்தரிக்கோல் (22 சதவீதம்), கத்தி (16 சதவீதம்) ஆகிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் 3,300 விமானங்களில் 4.8 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். டிரோன்களை உள்ளடக்கிய இணைய அச்சுறுத்தல்கள் இந்த துறைக்கு புது வகையான அச்சுறுத்தல்களாகும். பயணிகளின் பாதுகாப்பிற்காக நாங்கள் அனைத்து முனைகளிலும் பணியாற்றி வருகிறோம். விமானத்தில் உள்ள பயணிகளின் பாதுகாப்போடு, விமான நிலையத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பையும் சமமாக கவனித்து வருகிறோம் என்று கூறினார்.