திருச்சி,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கழகக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார்.அதன் தொடர்ச்சியாக
திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் ஊராட்சியில் அப்பகுதி மக்கள் கல்லணையிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை அரசு மாநகர பேருந்து இயக்க கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கல்லணையிலிருந்து சத்திரம் நோக்கி புதிய மாநகர பேருந்தை மக்களின் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்
மேலும் இந்நிகழ் மாவட்ட குழு துணை தலைவரும் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான கருணாநிதி, தலைமை, செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றிய குழு சத்யா கோவிந்தராஜ், நடராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியாகீதாதாஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.