தமிழகம் போதை பொருட்களின் கேந்திரமாக மாறி இளம் தலைமுறையை சீரழித்து வருவதையும், போதை பொருட்கள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ள விடியா திமுக அரசை கண்டித்து, லால்குடி நகர கழகம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் மனித சங்கிலி
போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்று கண்டன உரையாற்றி கோசங்களை முழங்கினார். மனித சங்கிலியில் பொதுமக்களும், லால்குடி ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள் பங்கேற்றனர்.