நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதை பொருள் தீமை குறித்தும், அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இளைய தலைமுறையினருக்கும்,மாணவர்களிடமும் வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் போலீஸார் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள்
குறித்தும், அதனை பயன்படுத்தக் கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது மாணவர்களை தங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் போதை பொருளால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சார்பு – காவல் ஆய்வாளர் தேவசேனாபதி, சிறப்பு சார்பு – காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.