இந்தியாக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. வேளாண்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், ஐய்யபன், ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
சிலர் காலையில் ஒரு கூட்டணி மாலையில் ஒரு கூட்டணியில் பேசி வருகின்றனர்- இவர்களை சமூக நீதி காவலர் என்று சொல்ல முடியுமா? இன்று பணத்திற்காக கூட்டணி வைக்கின்றனர். எடப்பாடி நான்கு ஆண்டுகளாக கல்லாக்கட்டி விட்டு, இன்று கட்சிகளை விலைக்கு வாங்குகின்றனர்.
உரிமைத்தொகையால் ஆண்கள். பெண்களிடன் பணம் கேட்கும் நிலை வந்துள்ளது
சென்னையிலுள்ள எங்கள் வீட்டில் தான் பானை சின்னத்தை உருவாக்கினோம்.யார் அதிக வாக்கு வாங்குவார்கள் என்று சிவசங்கர் நமக்கு சவால் விட்டுள்ளார், உங்களை நம்பி நான் சவாலை ஏற்கிறேன். இவ்வாறு பன்னீர்செல்வம்பேசினார்.
நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான திமுக கூட்டணி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.