திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காட்டூர் 39 வது வார்டு பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தும் தண்ணீர் விநியோகம் இன்னும் செய்யவில்லை. இதை கண்டித்தும்,
4 அளவிற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பதிலாக இரண்டு இன்ச் உயரத்தில் மட்டும் சாலை அமைத்ததை கண்டித்தும்,
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பானை உடைக்கும் போராட்டம் நடத்துவதாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று வடக்கு காட்டூர் காந்தி நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் மாநகராட்சிக்கும் பொது மக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பானைகளை உடைக்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்திக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினார்.
அதன் பேரில் போராட்டக்காரர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த ஒருவர் ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பானையை உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பானையை உடைத்ததால் திருவெறும்பூர் போலீசார் ஒரு பெண் உட்பட 14 பேரை கைது செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது