பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பாஜகவின் எதிர்க்கட்சியினர் பலரும் ரபேல் வாட்ச் விவகாரம் குறித்து அவர்களது கருத்துக்களையும், மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கான ரசீது கேட்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதற்கான ரசீது தன்னிடம் உள்ளதாக தெரிவித்து வருகிறார். ஆனால் பில்லை வெளியிட வில்லை. இந்த நிலையில் கடந்த வாரம் கோவையில் தல பயந்துட்டியா? என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று கரூர் திருமாநிலையூர் பகுதியில் பில்லு இன்னும் வரல என கேள்வி கேட்டு திமுகவினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது…