Skip to content
Home » திருச்சியில் 1000 மகளிருக்கு அஞ்சலக சேமிப்பு திட்டம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

திருச்சியில் 1000 மகளிருக்கு அஞ்சலக சேமிப்பு திட்டம்… அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது பிறந்தநாளை திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் முன்னிலையில் திருச்சி 16 -வது வார்டு மகளிருக்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்ட துவக்க விழா நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டுக்கு உட்பட்ட மகளிருக்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் ஆயிரம் மகளிருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகை செலுத்தி அன்றாடம் தங்களின் வரவுகளை சேமிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது . இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ்

பொய்யாமொழி கலந்து கொண்டு மகளிருக்கு சேமிப்பு வைப்பு தொகை அட்டையை வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி தலைமை அஞ்சலக முதுநிலை அதிகாரி ராஜ்குமார், துணை அஞ்சலக அதிகாரி சீனிவாசன் மற்றும் பகுதி கழகச் செயலாளர் ஏ. எம்.ஜி.விஜயகுமார், வட்டக் கழகச் செயலாளர்கள் தங்கவேலு, சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், ஆயிரம் மகளிருக்கு அஞ்சலக சேமிப்புத் திட்ட அட்டைகளை வழங்கி  அமைச்சர் மகேஷ் கூறியதாவது..

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர காரணாக இருந்தவர்கள் பெண்கள். எனவேதான், திமுக அரசின் திட்டங்கள் அனைத்தும் குடும்பத் தலைவியாக உள்ள மகளிரை முன்னிலைபப்டுத்தி செயல்படுத்தப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடனேயே மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, மகளிருக்கு மாதந்தோரும் ரூ.ஆயிரம் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. தாய்-சேய் நலன் காக்க ஊட்டச்சத்துடன் கூடிய சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சேமிப்பு பழக்கம் மகளிருக்கு மிகவும் அவசியமானது. சிக்கலான தருணங்களில் சேமிப்புத் திட்டமே கை கொடுக்கும். இந்த வகையில் துணை முதல்வர் பிறந்தநாளுக்காக ஆயிரம் மகளிருக்கு அஞ்சலசேமிப்பு கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டு, அனைவருக்கும் தலா ரூ.100 வைப்புத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மகளிர் தொடர்ந்து தங்களது பங்களிப்பை செலுத்தி பயன்பெற வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *