தஞ்சை மாவட்டம், பாபநாசம் தலைமை அஞ்சலகத்தில் ஆதார் எடுக்கப் படுகிறது. இதற்காக பொது மக்கள் காலை 8 ணிக்கு முன்பிருந்தே வரிசையில் காத்து நிற்கின்றனர். ஆனால் தலைமை அஞ்சலகம் 9 மணியளவில் தான் திறக்கப்படுகிறது. இதில் எதிர் பாராமல் பெய்யும் மழையில் ஒதுங்க இடமின்றி வரிசையில் நிற்பவர்கள் அவதிப்படுகின்றனர். இதனால் ஆதார் எடுப்பதை 8 மணியளவில் தொடங்க வேண்டும் என்று பாபநாசம் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.