Skip to content

மின்கம்பத்தில் கேபிள் ஒயர்கள்….. 15 நாளில் அகற்ற உத்தரவு…

  • by Authour

மின்கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் ஒயர்களை 15 நாட்களுக்கு அகற்ற ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய பகிர்மானப் பிரிவு இயக்குநர்  அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது

மின் கம்பங்களில் கேபிள் டிவி ஒயர்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை கட்டி வைப்பதன் மூலம் மின்விபத்துகள் நேரிட்டு, உயிரிழப்புகள் ஏற்படக் காரணமாவதாகவும், மின் கம்பங்களை பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பின்னரும், பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்களில் கேபிள் டிவி ஒயர்கள் கட்டியிருப்பதை பார்க்க முடிகிறது .

எனவே மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில் 15 நாட்கள் முன் அறிவிப்பு வழங்கி, கேபிள் டிவி ஒயர்களை அகற்றுமாறு ஆபரேட்டர்களை அறிவுறுத்த வேண்டும் , இந்த அறிவுறுத்தலை அனைத்து பகிர்மானப் பிரிவு அதிகாரிகளும் எந்த வித புகாரும் எழாத வண்ணம் செயல்படுத்த வேண்டும் , இது தொடர்பாக அவ்வப்போது பிரிவு அதிகாரி கள ஆய்வு செய்து, மின்கம்பங்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

கேபிள் டிவி ஒயர்கள் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் , இதனை பகிர்மான பிரிவு செயற்பொறியாளர் மாதந்தோறும் தவறாமல் கண்காணிப்பதோடு, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் ஏதேனும் மின் விபத்துகள் நேரிட்டால் கள அலுவலர்களே அதற்கு பொறுப்பு.

இது தொடர்பாக பகிர்மான பிரிவு தலைமைப் பொறியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!