Skip to content

மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் சண்டை ஏற்பட்ட காரணத்தினால் ஜோதிபாசு மன உளைச்சலில் இருந்துந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் காரைக்கால் மாவட்ட எல்லையில் நல்லாத்தூரில் உள்ள மதுபான கடையில் குடித்துவிட்டு மதுபானம் மற்றும் பூச்சி மருந்து ஆகியவற்றை வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். தொடர்ந்து வீட்டின் அருகே தென்னம்பிள்ளை சாலை பகுதியில் பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு பாதி வைத்துள்ளார்.

அப்போது அப்பகுதிக்கு வந்த அவரது நண்பரான ஜெரால்டு(24) பூச்சி மருந்து கலந்து இருப்பதை அறியாமல் ஜோதிபாசுவிடம் மதுபானத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர் மதுவில் விஷம் கலந்திருப்பதாக ஜோதிபாசு எச்சரித்த நிலையில் ஏற்கனவே மது அருந்தி உச்ச போதையில் இருந்த ஜெரால்டு நண்பரின் பேச்சைக் கேட்காமல் குடித்துள்ளார். நீண்ட நேரமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் அதே பகுதியிலேயே ஜோதிபாசு மருந்து கலந்து குடித்த மதுபானத்தை வாந்தி எடுத்துள்ளார்.

பின்னர் வெகு நேரத்துக்கு பிறகு ஜெரால்டு வீட்டிற்கு ஜோதிபாசு தகவல் கொடுக்கவே அங்கு வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி ஜெரால்டு உயிரிழந்தார். மேலும் ஜோதி பாசுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெரம்பூர் காவல்துறையினர் ஜெரால்டுவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து  விசாரணை நடத்தினர்.

முன்விரோதம் காரணமாக ஜோதிபாசுவை  கொலை செய்யும் நோக்கில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து ஜெரால்டிற்கு கொடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை  நடைபெற்று வருகிறது. வடிவேல் படத்தில் வரும் சூனா பானா காமெடி காட்சி தற்போது நிஜத்தில் அறங்கேறி இளைஞரின் உயிர் பரிதாபமாக பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!