பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டின் அருகே கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி , பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது பொற்கொடி அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். மேலும் அவர் இனி கட்சிப்பதவிகளில் செயல்பட மாட்டார். மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் கடசியினர் செயல்பட வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.