புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இன்பா என்ற இன்பநிதி( 24). இவர் இன்பா டிராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இவர் பதிவிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகள் அதிகம் இருந்தது. அதிலும் சமீபத்தில் வெளியிட்ட வீடியோக்களில் மாணவி ஆசிரியரை காதலிப்பது போன்ற வீடியோக்களும் ஆபாச வார்த்தைகள் அதிகம் உள்ள வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது.

இவரது வீடியோக்கள் அனைத்தும் அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும், பெண்களின் நாகரிகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், இளைஞர் சமுதாயத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாகவும், இவரது வீடியோக்களை பார்க்கும் மாணவிகள், பெண்கள் ஆகியோர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து திருச்சி சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் திருச்சி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் திருச்சி போலீசார் இன்பா என்ற இன்பநிதியை கைது செய்துள்ளனர்.