Skip to content

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவுக்கு திருமணம்….

  • by Authour

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இன்று வசி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. நடந்த முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக பங்கேற்றார். ரசிகர்களின் அன்பை பெற்ற இவர், இறுதிப்போட்டியில் ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரியங்கா  ஏற்கனவே பிரவீன் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், தற்போது வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இவரின் திருமணத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “லைப் அப்டேட்: இந்தப் பதிவோடு சூரிய அஸ்தமனத்தைத் துரத்தப் போகிறேன்” எனக் குறிப்பிட்டு திருமண புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!