மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் நபாய் மலைத்தொடர் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக சிலர் சட்டவிரோதமாக கசகசாவை பயிரிட்டு வளர்த்து வருவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சைகுல்-பிஎஸ் பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட 35 ஏக்கர் கசகசா பயிர்களை பாதுகாப்புப்படையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து அழித்தனர். அழிக்கப்பட்ட கசகசா பயிர்களின் மதிப்பு சுமார் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கசகசா பயிர்கள் போதைக்கு பயன்படுத்த சட்டவிரோதமாக பயிரிடப்பட்டதால் அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் இதுவரை 12 மாவட்டங்களில் 19 ஆயிரத்து 135 ஏக்கர் சட்டவிரோத கசகசா பயிர்களை மணிப்பூர் அரசு அழித்துள்ளது.
எனவே இந்த கசகசா பயிர்களை பயிரிட்டவர்கள் யார், என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.