Skip to content

பூரண குணமடைந்த சித்தர்…..மனநல காப்பகத்தில் ஒப்படைப்பு…..

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 15 to 20 ஆண்டுகளாக சுப்ரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு, உடைகள் அணியாமல் சுற்றி திரிந்தும், யாசகம் எடுத்து உணவருந்தியும், தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள அரளிச் செடியில் படுத்திருந்து இருந்தார்.

இந்நிலையில் சுப்பிரமணி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் அரசு பேருந்து பணி மனையில் நேரம் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாகவும், இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். சுப்பிரமணி அவர்களிடம் ஏதேனும் கேட்டால் எதுவும் பேசுவதில்லை.

கடந்த நான்கு மாதங்களாக சித்தர் என்றும் நெடுஞ்சாலை சித்தர் என்றும் கூறி பொதுமக்களிடம் ஏமாற்றியும், சமூக வலைதளம் மூலமாக வதந்தியை பரப்பியும் கரூர் to திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தகரக் கொட்டகை அருகில் உள்ள நாகம்பள்ளி பிரிவு, பகுதியில் குடிசை போட்டு அமர வைத்து அவரிடம் ஆசி வாங்க வரும் பொதுமக்களிடமிருந்து உண்டியல் வசூல் செய்து சுய லாபம் பெற்று பணம் வசூல் செய்து வந்ததாக புகார் எழுந்த நிலையில் அவரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் வருவாய்த்துறை, காவல்துறை உதவியுடன் 2.12.2022 அன்று அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் 15 நாள் சிகிச்சைக்கு பின்பு அவர் பூரண குணம் அடைந்த பின்பு தற்போது தேனி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!