பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் எழுந்தளிருள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் ஆலையத்தில் கடந்தாண்டு, மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்று ஓராண்டு நிறைவுற்ற நிலையில், வருடாபிஷேக விழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா குறித்து ஆலோசனைக்கூட்டம் ஸ்ரீதிரெளபதி அம்மன் ஆலையத்தில், ஸ்ரீதிரெளபதி அம்மன் அறக்கட்டளையின் தலைவர் சூரியபிரகாசம் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பூலாம்பாடி மண்ணின் மைந்தரும், மலேசியா தொழிலதிபருமான டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில்,
அருள்மிகு திரெளபதி அம்மன் கோவில் வருடாபிஷேக விழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா வரும் ஜீலை 4-ந்தேதி சக்தி அழைத்தல், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுன் விழா தொடங்குகிறது. அடுத்தநாள்முதல் 18-நாட்களுக்கு திரெளபதி அம்மன் வரலாற்றைக்கூறும் பாரதம் படித்தல் நிகழ்வும், அதனைத்தொடர்ந்து, ஜீலை 21-ந்தேதி வெள்ளிக்கிழமை பொங்கலாயி அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும், 22-ந்தேதி மாலை கணபதி பூஜை, 23-ந்தேதி காலை திரெளபதி அம்மனுக்கு நன்னீராட்டு விழாவும், பொங்கல் மாவிலக்கு நிகழ்ச்சியும்,பகல் 12-மணிக்கு நாட்டுக்கல் பகுதியிலிருந்து அழகுகுத்துதல்,அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நிகழ்ச்சியும்,இரவு கலைநிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து 24-ந்தேதி சுவாமியின் திருவிதீ உலா நடைப்பெற்று, நிறைவு நிகழ்ச்சியான 25-ந்தேதி மஞ்சள்நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில், அனைத்து சமூதாய மக்களும், அனைத்து விழாக்குழு பொருப்பாளர்களும், டத்தோ.எஸ்.பிரகதீஸ்குமார் நற்பணி மன்றப் பொருப்பாளர்களும், கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.