புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த வேந்தன் பட்டிமாப்படச்சான்பகுதியில் வசித்து வந்த பொறியாளர் பழனியப்பன்(54), இவரது தாயார் சிகப்பி ஆச்சி( 76), ஆகிய இருவரையும் கடந்த மாதம் 24ம் தேதி மாம் நபர்கள் வீடு புகுந்து கொலை செய்து பணம், நகைகளை கொள்ளயைடித்து சென்று விட்டனர்.
இந்த கொலை , கொள்ளை குறித்து போலீசார் துப்பு துலக்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் குற்றவாளிகள் வீட்டினுள் மிளகாய் பொடியை தூவியும் ,அங்கு இருந்த கேமராவை உடைத்தும் சென்று உள்ளனர். எனவே குற்றவாளிகளை ஏற்கனவே பல குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்துமாவட்ட போலீஸ்சூப்ரண்ட் நந்திதா பாண்டேச ம்பவம் நடந்த இடத்திற்கு சென்று
விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக பொன்னமராவதிபோலீஸ் டிஎஸ்.பி.அப்துல்ரகுமான்,இன்ஸ்பெக்டர்
தனபால் ஆகியோர்வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.இச்சம்பவம் நடந்து
22நாட்களுக்கு மேலாகியும் கொலையாளிகளைகண்டுபிடிக்க முடியாமல் போலீஸார்திணறுகிறார்கள்.
கொலையாளிகளைபிடிப்பதில் காவல்துறையினர்மந்தமாக இருப்பதை தொடர்ந்து. திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.கார்த்திகேயன்,டி.ஐ.ஜி.சரவணசுந்தர் ஆகியோர் பொன்னமராவதிக்கு சென்று கொலையாளிகளை பிடிப்பதில் காலதாமதம்குறித்தும் ,கொலையாளிகள் விரைந்து பிடிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கிசென்றனர்.
இந்த இரட்டைக்கொலை ஆதாய கொலையா, அல்லது முன்விரோத கொலையா என்பது கூட இன்னும் தெரியவில்லை. கொலையில் ஒரு துரும்பு அளவு கூட துப்புதுலங்கவில்லை. இது பொன்னமராவதி பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல்ரகுமான், மற்றும் இன்ஸ்பபெக்டர் போன்ற அதிகாரிகள் உள்ளூரில் இருப்பதில்லை. அவர்கள் குமாஸ்தா உத்தியோகம் போல காலையில் 10 மணிக்கு போலீஸ் நிலையம் வருகிறார்கள். மாலையில் கிளம்பி விடுகிறாா்கள். இப்படி இருந்தால் குற்றவாளிகள் எப்படி சிக்குவார்கள் என உள்ளூர் மக்கள் மட்டுமல்ல, போலீசாரே வேதனையுடன் கூறுகிறார்கள்.
எனவே பொன்னமராவதியிலேயே தங்கி பணியாற்றும் அதிகாரிகளை அங்கு நியமிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதே நிலை நீடித்தால் பொன்னமராவதி மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.