வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே அவரது சொத்துக்களை கோர்ட் முடக்கி இருந்தது. அதை சிறப்பு கோர்ட் விடுவித்தது. அதை எதிர்ப்பு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கையும் நேற்று சிறைதண்டனை வழங்கிய நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்து வந்தார். இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயசந்திரன், பொன்முடி சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது. தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பளித்தார்.
