உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனால் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் , பொன்முடி, அவரது மனைவிக்கான தண்டனையையும், ஐகோர்ட்டின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏ ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாக சபாநாயகரும் கருத்து தெரிவித்து இருந்தார். எனவே அவர் விரைவில் எம்.எல்.ஏ. ஆவார் என தெரி்கிறது.