உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார். இதை விசாரித்த நீதிபதி, இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைக்கு பிறகு பொன்முடி கோரிக்கை குறித்து பரிசீலிக்கலாம் என்றார்.
பொன்முடி… தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
- by Authour
