உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இதில் கடந்த மாதம் 21ம் தேதி நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார். அதில் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியுடன் எம்.எல்.ஏ, பதவியையும் இழந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய 1 மாத காலம் அவகாசமும் ஐ கோர்ட் வழங்கியது. இந்த நிலையில் டில்லி உச்சநீதிமன்றத்தில் இன்று பொன்முடி, அவரது மனைவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்களது தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி உள்ளனர்.