ஆண்டு தோறும் திருச்சி பொன்மலை மாரியம்மன் கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொன்மலை செல்வ முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் இருந்து திருத்தேர் பொன்மலை ரயில்வே காலனி பகுதிகளில் நடைபெற்றது. இதனையொட்டி மேல்கல்கண்டார்கோட்டை மற்றும் பொன்மலைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு உள்ளிட்டவைகளை படையல் போட்டு வழிபட்டனர்.