திருச்சி பொன்மலை தெற்கு ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்கம் (SRES-NFIR) சார்பாக பொன்மலை மத்திய பணிமனை ஆர்மரிகேட் பகுதியில் இன்று காலை அகில இந்திய எதிர்ப்பு வார கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலை 6 .15 மணி முதல் 6.45 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடத்தது.
எஸ்.ஆர்.இ.சங்க உதவி கோட்ட செயலாளர் என்.ராமசாமி தலைமை தாங்கினார். உதவி பொது செயலாளர் எஸ்.ரகுபதி கண்டண முழக்க பேரூரையாற்றினார்.
UPS-ல் உள்ள குறைகளை, பாதகங்களை களைந்து OPS ஐ அமுல்படுத்திட வேண்டும்.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை முடக்கப்பட்ட 18 மாத பஞ்சப்படி, பயணப்படிகளை வழங்க வேண்டும்.
லாபகரமாக இயங்கும் ரயில்வேயில் தனியார்மயத்தை தடுத்திட வேண்டும்.போனஸ் சீலிங்கை ரத்து செய்து சம்பளத்திற்கேற்ப போனஸ் வழங்கிட வேண்டும்,பணிமனை தொழிலாளர்களுக்கு Risk & Hardship அலவன்ஸ் வழங்கிட வேண்டும்
பயோமெட்ரிக் பஞ்சை அனைத்து பணிமனைகளிலும் ICF போன்று அமுல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.இ.சங்க பணிமனை கோட்ட நிர்வாகிகள் எஸ்.பாலமுருகன், முகமது கோரி, ஞானசேகர், மதன்குமார், சாம்சன், என்.சி.ராஜேந்திரன், கென்னடி, வெங்கட்நாராயணன், செந்தில்குமார், ஜோசப் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.