Skip to content

ரவுண்ட்ஸ் இல்லை, கண்காணிப்பு இல்லை.. அலட்சியமாக இருக்கிறதா பொன்மலை போலீஸ்..?

  • by Authour

திருச்சி பொன்மலை மேல கல் கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் முருகேசன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முத்துப்பாண்டி வயது (27) இவருடைய தாய் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு அண்ணன் ஒருவர் உள்ளார். முத்துப்பாண்டி கோயம்புத்தூரில் ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று அவர் அருகே உள்ள மூகாம்பிகை நகர் பகுதியில் ஒரு மீன் கடையில் மீன் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். அன்று மதியம் 12 மணி வரை மீன் வெட்டும் தொழில் ஈடுபட்ட முத்துப்பாண்டியை அவரது நண்பர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.  சில மணி நேரத்தில் பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே புற்று நாகம்மாள் கோவில் பின்புறம் கழுத்தில் கத்தி குத்து காயங்களுடன் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அங்கு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது முத்துப்பாண்டி என்பது தெரியவந்தது இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் டூவீலரில் முத்துபாண்டியை அழைத்து சென்றது திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்த ஸ்டான்லி வயது (27), சதீஷ் என்கிற மூல சதீஷ் (23) ஆகிய 2 பேரும் தான் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் .. இறந்து போன முத்துப்பாண்டி தொடர்ந்து அந்தப் பகுதியில் பெண்களை கேலி செய்து தகராறு ஈடுபட்டு வந்ததாகவும் இருவரும் சேர்ந்து முத்துபாண்டியை பலமுறை எச்சரித்ததாகவும் மீண்டும் இதுபோல் சம்பவத்தன்று பெண்களை கேலி செய்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்ததால் மது போதையில் இருந்த முத்துப்பாண்டியை கொலை செய்தோம் எனக் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  கடந்த சில மாதங்களாகவே பொன்மலை போலீசுக்குட்பட்ட மேலகல்கண்டார்கோட்டை, மாஜிராணுவக்காலனி, விவேகானந்தநகர், பொன்மலைப்பட்டி, மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் இது குறித்து உளவுத்துறையினர் கவனிப்பது இல்லை. மேலும் காலை மாலை இருவேளைகளிலும் போலீசாரின் ரவுண்ட்ஸ் சரியாக இல்லை என்றும் ஒயின்ஷாப்புகளுக்கு சென்று வரும் வாலிபர்கள் தகராறு செய்வது குறித்தும் போலீசார் பெரிய அளவில் கண்டுக்கொள்வதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.  இந்த விவகாரத்தில் பொன்மலை போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லைஎன்றால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *