திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட மேலகல்கண்டார் கோட்டை, ஆலத்தூர், கீழ கல்கண்டார் கோட்டை, பகுதிகளை சுற்றி சுமார் 5000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் பொன்மலை பகுதியில் உள்ள இரயில்வே பணிமனை, இரயில்வே மருத்துவமனை, இரயில்வே அக்கவுண்ட்ஸ் இன்ஜினியரிங் அலுவலகங்கள் கனரா வங்கி டாக்டர் அம்பேத்கார் திருமண மண்டபம், இரயில்வே கே.வி.பள்ளிக்கூடங்கள் மற்றும் புகழ் பெற்ற பொன்மலை வார சந்தை போன்ற இடங்களுக்கு தடை இன்றி சென்றுவர, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டுடன் சப்வே அமைக்கவும், “C” TYPE பகுதியில் உள்ள தற்போதைய சாலைகள் மிகவும் பயனுள்ளதாகவும் குறிப்பட்ட நேரத்தில் சென்றுவர மிகவும் வசதியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த “C” TYPE சாலைகளை இரயில்வே நிர்வாகம் மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அறியப்படுகிறது. அப்படி மூடப்படுமானால் பொதுமக்கள், இரயில்வே ஊழியர்கள் மற்றும் இரயில்வே ஓய்வூதியர்களும் மேற்கூறிய இடங்களுக்கு சென்றுவர மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்பதால் மேற்சொன்ன சாலைகளை மூடும் எண்ணத்தை கைவிடுமாறும், குண்டும் குழியுமாக உள்ள “C” TYPE சாலைகளை சீரமைத்து தருமாறும் தென்னிந்திய ரயில்வே திருச்சி கோட்ட மேலாளரிடம் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆன அன்பில் மகேஸ் பொய்யாமொழி மனு அளித்தார்.
மனு அளித்த போது மாநகர கழக செயலாளர் மு.மதிவானண்.
எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் விரசேகரன் மற்றும் எஸ் ஆர் எம் யூ நிர்வாகிகள் பொன்மலை பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.