திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணி உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிமனை தொடங்கி 96 வருடங்கள் ஆகிறது. 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பணிமனை முற்றிலும் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும் பிரிட்டிஷ்
கட்டிடக்கலை வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த பணிமனையில் ஆயுதபூஜையை முன்னிட்டு வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் பார்வையிட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்கும் அதன்படி இந்த ஆண்டு இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை பொதுமக்கள், ,கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றிப்பார்க்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.