பொங்கல் திருநாள் இன்று தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் வாழ்த்து செய்திகள் வெளியிட்டு உள்ளனர்.
இதுபோல கேரள முதல்வர் பினராய் விஜயனும் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
செழிப்பையும், பெரும்வளத்தையும், முன்னேற்றத்தையும் சாத்தியப்படுத்துவது கூட்டுழைப்பும் ஒற்றுமையுமே என்று அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இவ்வேளையில் சந்தோசமான, ஒளிமயமான சமத்துவ எதிர்காலத்தை அடைவதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம். என் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.