திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் மற்றும் அரசு
தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் தொடக்க பெண்கள் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோதை, ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.