தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதற்காக வரும் 3ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும். அதில் எந்த தேதி, எந்த நேரம் என குறிக்கப்பட்டுள்ளதோ அதே தேதியில் வந்து பெற்றுக்கொள்ளலாம். வரும் 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.