Skip to content
Home » புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

பொங்கல் திருநாளையொட்டி ரேசன் கடைகளில்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.  இதற்கான டோக்கன்  இன்று வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  இன்று தொடங்கி வைத்தார். அத்துடன்  சில இடங்களுக்கு சென்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாநகராட்சி, அடப்பன்வயல் 2-ம் வீதி மற்றும் கோவில்பட்டி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  இன்று (03.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்களை வழங்கினார்.

பின்னர்  கலெக்டர் அருணா கூறியதாவது: தெரிவித்ததாவது;

. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரும் 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட  உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4,91,944 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 947 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு என மொத்தம் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிடும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இப்பணிகளின் போது நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு குடும்ப

அட்டைதாரர்கள் முழு ஒத்துழைப்பு நல்கி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று

பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.