Skip to content
Home » பொங்கல் தொகுப்பு… முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு…

பொங்கல் தொகுப்பு… முன்னேற்பாடு பணி குறித்து ஆய்வு…

  • by Senthil

கூட்டுறவுத்துறை அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும்  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான நியாயவிலைக் கடைகளில் தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கத்தினை அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பதாரர்கள் அனைவருக்கும் வழங்குவதற்காக டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி மற்றும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்  த.வேலு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜெ.இராதாகிருஷ்ணன்   கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்  அ.சண்முகசுந்தரம்,  மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!