விஜய் நடித்துள்ள வாரிசு, அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் பொங்கலையொட்டி வரும் 11ம் தேதியே திரைக்கு வருகிறது. பெரும்பாலான இடங்களில் இரு திரைப்படங்களும் ஒரே காம்பளக்சில் உள்ள இருவேறு திரையரங்குகளில் வெளியாகிறது. எனவே இரு தரப்பு ரசிகர்களும் ஒரே இடத்தில் கூடும் வாய்ப்பு உள்ளது.
வழக்கமாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விசேஷங்களில் தமிழகத்தின் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அப்படி அனுமதி வழங்கப்பட்டால் அதிகாலையில் ஒரு காட்சி ஒளிபரப்பாகும். பெரும்பாலும் அந்த காட்சியில் ரசிகர் மன்றத்தினரே திரண்டு இருப்பார்கள்.
அதிகாலை வேளையில் இரு தரப்பு ரசிர்களும் ஒரே இடத்தில் திரண்டால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் திரையரங்க உரிமையாளர்களிடம் உள்ளது. எனவே இந்த முறை அதிகாலை காட்சி திரையிட வேண்டாம். போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு சிறப்பு காட்சியை தொடங்கலாம் என தியேட்டர் அதிபர்கள் மத்தியில் ஒரு கருத்து இருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாகஎன்ன முடிவு எடுக்கப்படும் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.