Skip to content

பொங்கல் ரிலீஸ்… உறுதிப்படுத்திய ‘காதலிக்க நேரமில்லை’ படக்குழு !…

ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் பிரதர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். மேலும் சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் SK 25 படத்தில் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர ஜீனி எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து லால், வினய் ராய் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திலிருந்து கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.