2023ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 1000 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து ரேசன் கார்டு அட்டைதாரர்களுக்கும் டோக்கன் விநியோகிப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உடனிருந்தார்.