Skip to content
Home » பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

பொங்கல் சிறப்பு பேருந்துகள் 12ம் தேதி முதல் இயக்கம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வரும் 15,01,2023 கொண்டாடப்பட உள்ளது இதனை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம்   குடந்தை கோட்ட அரசு போக்குவரத்து கழகம்  பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி,   பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மணனார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை திருவாரூர். திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர். புதுக்கோட்டை காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கும் 12,01.2023 , 13,01, 2023 மற்றும் 14,01,2023 ஆகிய நாட்களிலும் மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம் ,திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ,ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர்,திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சை ,புதுக்கோட்டை, ஆகிய ஊர்களுக்கு கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 12,01, 2023 முதல் 14,01, 2023 வரையும், அனைத்து முக்கிய தடங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளுக்கும், பயணிகள் பயன்பாட்டுக்கு விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 12.01.2023 முதல் 14,01, 2013 வரை சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம், தஞ்சாவுர். பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு ,ஒரத்தநாடு தட பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் MEPZ அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்.

கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர். திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு  பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்

மேலும் பொங்கல் முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 16,01, 2023 -17,01, 2023 மற்றும் 18,01, 2023 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேற்கண்ட தகவலை அரசு போக்குவரத்து கழக மேலண்மை இயக்குநர் எஸ்.ராஜமோகன்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *