பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை திருநாளா பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் திருநாளில் மண்பாண்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவியூர், சித்தலிங்க மடம், பிள்ளையார் பாளையம், பாடியந்தல், வீரங்கிபுரம், வடபழையனூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் சூடுபிடித்துள்ளது.