தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிக்கைக்காக பாரம்பரியத்தை தக்க வைக்கும் அகப்பை தயாரிக்கும் பணி தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாட்டில் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்று இங்கு தயாரிக்கப்படும் அகப்பை அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது என்பதுதான். பொங்கல் செய்ய அகப்பையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அவ்வூரில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கலன்று காலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்குவர். இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெறுவதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. இந்த பொங்கலுக்கும் தொடர்கிறது.