Skip to content

பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று புத்தாண்டையொட்டி  குடும்பத்துட்ன மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பின்னர்  அவர் கூறியதாவது:

2025 ஆண்டு அ.தி.மு.க.விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற ஆண்டாகவும் திகழும். தி.மு.க. அரசு உண்மையாகவே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும்  என்றால் ஒரு குடும்பத்திற்கு ரூ.30 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அப்போதைய 5 ஆயிரம் ரூபாயின் மதிப்பு இப்போது ரூ.30 ஆயிரம்.  எனவே 30 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!