Skip to content
Home » திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

  • by Authour

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை சிரமமின்றி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு முன்னதாக அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும். 03.01.2024 இன்று காலை 8 மணி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

திருச்சிராபள்ளி மாவட்டத்தினைப் பொறுத்தவரை, நடைமுறையிலுள்ள 8,33,131 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 968 குடும்பங்கள் ஆக மொத்தம் 8,34,099 குடும்பங்களுக்கு 1291 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு

வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் தாங்களது குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி நேரம் ஆகியவற்றினை பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர்கள்  வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0431-2411474, அலைபேசி எண். 9445045618-ல் தொடர்பு கொண்டு புகாரினை தெரிவிக்கலாம். மாநில அளவில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.