பெண்கள், மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தியும், போதை மற்றும் கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தியும் திருச்சி மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் ரயில் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமையில் இன்று நடந்தது .மாவட்ட துணைச் செயலாளர் பிரித்தா விஜய் ஆனந்த்,மகளிர் அணி இந்துமதி, பெரியக்கா ஆகியோர் வரவேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக வலைதள அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செந்தில்குமார் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் சாகுல் ஹமீது தொழிற்சங்கம் திருப்பதிபொருளாளர் மில்டன் குமார்மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் வி கே ஜெயராமன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்குமார் காளியப்பன் மகாமுனி தலைமைசெயற்குழு உறுப்பினர் கலைப்புலி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், லோகராஜ், விஜய் சுரேஷ், வக்கீல் ஐயப்பன் பெருமாள் ,பகுதி செயலாளர்கள் என்.எஸ்.எம் மணிகண்டன், குட்ஷெட் சங்கர் அலெக்சாண்டர் மோகன் ,வெங்கடேசன், குமார் ,அருள்ராஜ்,ஒன்றிய செயலாளர்கள் மாரிசன், பரமசிவம், முத்துக்குமார், சிங்காரவேல், ,நிர்வாகிகள் எம் ஜி எம் சேட்டு பெரியக்கா,அருணகிரி செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் சுசிலா செல்வராஜ் நன்றி கூறினார்.