தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை தெட்சிணாமூர்த்தி மார்க்கெட் டில் உள்ள அர்பன் கடை எண்20அங்காடியில் முன்னாள் நகர தி.மு.க.செயலாளர் க.நைனாமுகம்மது, கவுன்சிலர் செந்தாமரை பாலு ஆகியோர் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர் வட்டசெயலாளர் ஆசிப்,வட்டபிரதிநிதிகள் சுப்பு,சேகர், திமுகழக செயல்வீரர்கள் சதாம்உசேன்,அரிசிக்கடை சரவணன் உள்ளிட்ட கழக தொண்டர்கள் பங்கேற்றனர். மக்கள் மகிழ்ச்சியுடன் அதை வாங்கி சென்றனர். 5 பேர்களுக்கு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில் ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்யும் எந்திரத்தின் சர்வர் பழுதானது. இதனால் மற்றவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதே நிலை புதுகை நகரின் பல கடைகளிலும் ஏற்பட்டதால் மக்கள் கடைகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.