பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ. சீனிவாசன் கலந்து கொண்டு, நுழைவுவாயிலில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் அழைத்து வரப்பட்டார். அவரை கல்லூரி முதல்வர் முனைவர் நா. வெற்றிவேலன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். முதலாவதாக கல்லூரியில் உருவாக்கப்பட்ட் பத்மாவதி தாயார் சன்னதியில் பூஜைகளை முடித்துவிட்டு, கோமாதா பூஜை முடித்துவிட்டு துறைவாரியாக வைக்கப்பட்ட பொங்கலைப் பார்வையிட்டார்.
பின்பு கோலப்போட்டிகளை பார்வையிட்டார். வழுக்குமரம் ஏறும் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியை சீனிவாசன் பார்வையிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மாணவர்களிடம் உரையாற்றும்போது “ தமிழர்களின் பாரம்பரிய விழா இப்பொங்கல் விழா. இவ்விழா இங்கு மிகவும் பிரமாண்டமாய் கொண்டாடப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகளாகிய நீங்கள் கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும் இவ்விழாவினை கொண்டாடி வருகின்றீர்கள். அது எனக்கு மிகவும் பெருமிதத்தை தருவதாக உள்ளது. தித்திக்கும் இந்த இனிய நாளில் அனைத்து நலமும், வளமும் பெற்று வாழ்க என்று வாழ்த்தினார்.
நிர்வாக இயக்குநர் நிவானி கதிரவன் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் கும்மி, கோலாட்டம், நாட்டுப்புறப்பாடல், விளையாட்டு என பல நிகழ்ச்சிகளை நடத்தி மிகவும் சிறப்பாகக் கொண்டாடினார்கள். இப்பொங்கல் விழாவில் 3500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்