பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனிவாசன் தலைமைதாங்கினார்.
இவ்விழாவையொட்டி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து மண் பானைகளில் பொங்கல்வைத்தனர்.
இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும்
வளாகத்தை சுற்றி மாட்டு வண்டிகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் மீது சவாரி செய்து பெற்றோர்கள் மகிழ்ந்தனர்.
இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.