தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு .ஒரு கிலோபச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பை திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி மாநகரக் கழக செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் 16 – வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் நகர் கலைவாணர் தெரு வசந்த நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலை கடையில் வழங்கினார். பொதுமக்கள் மகிழ்வுடன் பொங்கல் பொருட்களை பெற்றுக்கொண்டு கழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் வட்டக் கழக செயலாளர்கள் சண்முகம் தங்கவேலு. மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.